வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள்…(காணொளி)

252 0

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கு தண்டப்பணம் அல்லது வழக்கு தாக்கல் செய்யப்படும் என வவுனியா சுகாதார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் மே.ஜெயா தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக இன்று சிரமதான பணி நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா சுகாதார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கு தண்டப்பணம் அல்லது வழக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிரமதான பணி வவுனியா சிறு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யு.அயூப் கான் தலைமையில் வவுனியா நகரத்தில் நடைபெற்றது.

இந்த சிரமதான பணியில் வவுனியா சிறு வியாபாரிகள் சங்கமும் வவுனியா பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சிறு வியாபாரிகள் கடை தொகுதி பகுதிகளிலேயே இந்த சிரமதான பணிகள் நடைபெற்றன.

சிறு வியாபாரிகளின் கடைத்தொகுதி உரிமையாளர்கள், ஊழியர்கள் இந்த சிரமதானப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.