சிறு கைத்தொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் தொடர்பான தேசிய கொள்கை அவசியம்

43 0
மட்பாண்ட உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த அரசாங்கம் அடையாள அட்டை வழங்கிய போதிலும் புதிய ஜனாதிபதியின் கீழ் அந்தக் கொள்கை இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் அவர்களுக்குத் தேவையான வளங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், இது சகல கிராமிய கைத்தொழிலிலும் காணக்கூடிய பிரச்சினையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் கிராமிய மற்றும் சிறு கைத்தொழில்களுக்கான தேசிய கொள்கை இல்லாததால் பெரும் குறைபாடுகள் நிலவுவதால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்,குடிசை மற்றும் கிராமிய தொழில்கள் மேற்கொள்ளப்படும் பிரதேச எல்லைகளில் விசேட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட உள்நாட்டு சந்தையை வழங்குதலும், ஏற்றுமதி சார்ந்த தொழிலாக மேம்படுத்தத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு,இந்த வியாபாரங்களை இலகுபடுத்தும் வகையில் சிறு கைத்தொழில்கள் மற்றும் கிராமிய கைத்தொழில்களுக்கான தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெலிகம கும்பல்கம மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களை ஞாயிற்றுக்கிழமை (24) சந்தித்து கலந்துரையாடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் திரும்பும் அவதானத்தை மையமாக வைத்து மக்கள் வாக்கு மூலம் ஆட்சிமட்பாண்ட உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த அரசாங்கம் அடையாள அட்டை வழங்கிய போதிலும் புதிய ஜனாதிபதியின் கீழ் அந்தக் கொள்கை இரத்து செய்யப்பட்டுள்ளது அதிகாரம் பெற்ற பின் அனைத்தையும் மறந்துவிடும் கலாச்சாரம் நம் நாட்டில் உள்ளதாகவும்,இவ்வாறான ஒரு கலாச்சாரம் இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பாக சகல கிராமிய தொழிலையும் ஏற்றுமதி சார்ந்த தொழிலாக மாற்றுவதற்குத் தேவையான ஏற்பாட்டை மேற்கொள்ள பாரம்பரிய கிராமங்களை மையமாக வைத்து கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும்,இதனை இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்திக பத்திரனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கிராமங்களுக்குச் சென்று தொழில்துறையினரின் பிரச்சினைகளைக் கேட்டறிவது போலவே அடுத்த பாராளுமன்ற அமர்வில் புத்திக பத்திரன தலைமையிலான துறைசார் மேற்பார்வை குழுவிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆபரண,மட்பாண்ட, கைவினை உற்பத்தி தொழில்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கிராமங்களில் இருந்து பெறப்படும் ஆலோசனைகள் மூலம் சிறு கைத்தொழில் கொள்கை தயாரிக்கப்படும் என்றும்,தேசிய சிறு மற்றும் கிராமிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் என்றும்,என்றோ ஒரு நாள் மக்கள் வாக்கு மூலம் அரச அதிகாரத்தைப் பெற்ற நாள் முதல் குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.