தங்காலை மாரகொல்லியா, மெங்கோபீச் பகுதியில் கடலில் ஆபத்தான பகுதியில் நேற்று (24) மாலை நீராட சென்ற வெளிநாட்டு யுவதியும் அவரது காதலனும் நீரில் மூழ்கினர்.
பின்னர் பிரதேசவாசிகள் நீரில் மூழ்கிய பெண்ணையும் நபரையும் மீட்டு சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் அதன்போது குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 22 வயதான போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதி ஆவார்.
இவரது சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

