கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரத்கம விதுர என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ரத்கம விதுர மற்றும் கொஸ்கொட சுஜீக்கு இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காலி நகரின் மிகப் பெரிய ஜவுளிக் கடையின் உரிமையாளரான லலித் வசந்த மெண்டிஸ், தனது வியாபார நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, காலி டிக்சன் வீதியில் வைத்து இனந்தெரியாத இரு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

