நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸின் மீது மற்றொரு பஸ் மோதியதில் 15 பேர் காயம்! 

145 0

கொழும்பு, வீதியில்  தித்தவலமங்கட பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில்  காயமடைந்த 15 பேர் வரக்காபொல மற்றும் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை  இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு  பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக குறித்த வீதியில்  அதிகாலை ஐந்து மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.