அமெரிக்காவுக்கு விமானத்தில் வரும் பயணிகளுக்கு மேலும் கட்டுப்பாடு

261 0

மத்திய கிழக்கு மற்றும் 8 வட ஆபிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு வில்லைகள் (டெப்), மடிகணினிகள் போன்ற இலத்திரனியல் உபகரணங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவை மாத்திரம் அன்றி புகைப்படகருவி, டீ.வி.டீ பிளயர் மற்றும் இலத்திரனியல் விளையாட்டு பொருட்களும் இவ்வாறு அமெரிக்காவுக்கு விமானம் மூலம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கையடக்க தொலைபேசி மற்றும் ஸ்மாட் போன்களுக்கு இந்த தடை செல்லுபடியற்றதாகும்.

தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.