எவ்வாறாயினும், நான்கு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அல்லது மூன்று அமைச்சரவைப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து சில அமைச்சுக்களை மற்றவர்களுக்கு ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர் இதற்கு தனது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.