தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 4ஆம் நாளாகிய இன்று ,பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து ஊர்தி மற்றும் திருவுருவப்படம் என்பவற்றினை அடித்து நொறுக்கியதோடு, ஊர்தியின் சாரதி மற்றும் உடன்பயணித்தோர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இவற்றினை தாண்டி திருகோணமலையிலிருந்து வ்வுனியா மாவட்டத்திற்கு இன்று அதிகாலை ஊர்தி வந்துசேர்ந்தது.
இன்று சிறிலங்காப் புலனாய்வாளர்களால் சிதைப்பட்ட ஊர்தி, மீள் ஒருங்கிபடுத்தலுக்குப்பின் மாங்குளம் ஊடக கிளிநொச்சி நகரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.இன்றுஇரவு கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
.