தமிழர்களை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாக தலையிடவேண்டும்!

127 0
தியாகி திலீபனின் நினைவுஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை எந்தவித தயக்கமும் இன்றி கடுமையாக கண்டிப்பதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தமிழர்தாயகப்பகுதிகளை பாதித்துள்ள சம்பவங்களில் ஒன்றாகும் எனவும் தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவரான திலீபன் தனது ஆழமான உண்ணாவிரதப்போராட்டத்தின் மூலம் சாகும்வரை உண்ணாவிரதத்தின்மூலம் தியாகத்தில் உன்னதமான தியாகத்தை செய்தார்,இது தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கான அவரது அர்ப்பணிப்பின் சக்திவாய்ந்த அடையாளமாகும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் அமெரிக்கர்களாகிய நாங்கள் எங்களின் சக தமிழர்களுடன்  உறுதியாக நிற்கின்றோம்,சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின்  கோரிக்கைகளை வேண்டுகோள்களை ஆதரிக்கின்றோம் எனவும் அமெரிக்க தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐநாவும் சர்வதேச சமூகமும் உடனடியாக தலையிட்டு இலங்கைஅரசாங்கத்தின் இனப்படுகொலைகளில் தமிழ்மக்களை பாதுகாக்கவேண்டும்,எமது தாயகத்தில் உள்ள தமிழ்மக்களின்பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒருமுக்கிய நடவடிக்கையாக வடக்குகிழக்கு சுயராஜ்யமற்ற பிரதேசமாக அறிவிக்கப்படவேண்டும்  எனவும் தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்கள் அச்சத்துடன்வாழ்கின்றனர் இந்த தாக்குதல் 1983ம் ஆண்டு  இரத்தக்களறி கறுப்புஜூலையை நினைவுபடுத்தும் ஒரு சம்பவமாகும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.