யாழ். தென்மராட்சி விபத்தில் வயோதிபர் ஒருவர் பலி

204 0

யாழ். தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் – கச்சாய் வீதியில் ஒட்டங்கேணி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி தெய்வேந்திரநாதன் என்ற 75 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் சைக்கிளில் பயணித்த வயோதிபர் வீதியைக் கடக்க முயன்றபோது எதிர்த்திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.