வட கொரியா மீது அமெரிக்க குற்றச்சாட்டு

256 0
வட கொரியா அண்மைக் வரம்பு மீறிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக அமெரிக்க கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சகல ஆலோசனைகளும், வட கொரியாவினால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், புதிய ராஜதந்திர, பாதுகாப்பு மற்றும் பொருளாதார விதிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலத்தில் வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் பெரும் கவலைகளை தோற்றுவித்துள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட, தென் கொரியாக்களை பிரிக்கும் எல்லையில் உள்ள ஆயுத தடை வலயத்திற்கும் விஜயம் செய்த அமெரிக்க ராஜாங்க செயலாளர், குறித்த பிரதேசத்தின் நடவடிக்கைகளினை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.