கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் -சரத்வீரசேகர

101 0

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின்  பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவின் தலைவருமான சரத்வீரசேகர  கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நேற்று தேசியபார்வை தொடர்பான கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முப்படையின் தலைமை அதிகாரிகள் புலனாய்வு பிரிவுகளின் பிரதான அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ள  சரத்வீரசேகர அமைச்சரவையின் அனுமதியை பெற்ற பின்னர் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கனடாவின் தீர்மானத்தினை கண்டிப்பதற்காக  வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் நடவடிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் கடும் கண்டனம் வெளியிட்டதை பாராட்டியுள்ள சரத்வீரசேகர கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையிலேயே கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக பயணத்தடைகளை விதித்தது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்  யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர  இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு குறித்த கோரிக்கைகள் நியாயப்படுத்தப்படு;ம் நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை இழப்பார்கள் எதிர்கால யுத்தங்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டங்களில் இலங்கை தவறாக கையாளப்பட்டுள்ளது எனவும்  சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்தினரிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் இனப்படுகொலை என்பது கற்பிதம் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்,என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து வெளிவிவகார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்- எனினும் ஒட்டாவாவில் உள்ள தூதரகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதலிற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட  ஐநா தீர்மானம் காரணமாக பாதுகாப்புசட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் வடக்கி;ன் பாதுகாப்பை பணயம் வைத்து இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்ககூடாது எனவும் கருத்துவெளியிட்டுள்ளார்.