கிாிந்த கடலில் மூழ்கிய நால்வா்

142 0

கிரிந்த விகாரைக்கு அருகில் கடல் அலையில் சிக்கி யுவதியொருவா் காணாமல் போயுள்ளதுடன் மேலும் ஒரு யுவதி உயிரிழந்துள்ளார்.

இன்று (09) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மூன்று யுவதிகளும், இளைஞா் ஒருவரும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

அவா்களில் இளைஞனும் மற்றுமொரு யுவதியும் அவர்களுடன் வந்த மற்றொருவரால் காப்பாற்றப்பட்டனர்.

ஏனைய இரு யுவதிகளில் ஒருவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மற்றைய யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதியும், காணாமல் போன யுவதியும் பிபில பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

அவா்கள் பிபில பகுதியில் இருந்து கிாிந்தவிற்கு சுற்றுலா வந்தவா்கள் என தொிவிக்கப்படுகிறது.

காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.