ஏமன் விமான தாக்குதலில் 26 பேர் பலி

523 0

ஏமன் நாட்டில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவம் மற்றும் ராணுவ வட்டாரங்களை சேர்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டின் கோகா பகுதியில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொது மக்களில் 20 பேரும், 6 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மற்றும் ராணுவத்தை சேர்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. சந்தை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளர்ச்சியாளர்களை குறி வைத்து கோகாவின் ரெட்சீ துறைமுக பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் கிளர்ச்சியாளர்கள் அருகில் இருக்கும் சந்தையில் நுழைந்ததால் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமுற்று இருப்பதாகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏமன் நாட்டில் அரபு படைகள் நடத்தும் தாக்குதலில் பொது மக்கள் கொல்லப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அடிக்கடி நிகழும் இது போன்ற சம்பவங்கள் விமரச்னங்களுக்கு வழி செய்கிறது.
2015 ஆம் ஆண்டு துவங்கிய மோதலில் இதுவரை பொதுமக்களில் 7400 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 40,000க்கும் அதிகமானோர் காயமுற்றிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.