கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயார் – ஹர்ஷ

413 0

கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்தத் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 150 படகுகளில் ஆயிரத்து 500 அடியார்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக அடியார்களுக்கு இலங்கை கடற்படையினரால் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

இதேவேளை, இலங்கை – இந்திய கடற்றொழிலார்கள் பிரச்சினைக்கு இரு நாடுகளும் விரைவில் நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.