’தேசத் துரோகி எனக்கு மகனில்லை’ – சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை

247 0

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்பட்டு போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சைபுல்லா தேச துரோகி என்று கூறி, சடலத்தை வாங்க அவரது தந்தை மறுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்புடைய சிலர் பதுங்கியுள்ளதாக கூறி, போலீசார் அப்பகுதியில் தீவிர சோசனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சைபுல்லா என்ற வாலிபர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அவரது உடலை கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவெடுத்தனர். ஆனால், “போலீஸார் எங்களிடம் வந்து உடலை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு சேத விரோதியின் உடலை வாங்க மறுத்துவிட்டோம்,” என சைபுல்லாவின் தந்தை சர்தாஜ் கூறியுள்ளார்.

மேலும், “சைபுல்லா சேத விரோதியாக இருந்தால் எங்களுக்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை,” எனவும் அவர் தெரிவித்தார். தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள சைபுல்லாவின் தந்தை சர்தாஜுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த திங்களன்று சைபுல்லா, தனது தந்தையை தொலைபேசியில் அழைத்து, தனக்கு சவூதிக்கு விசா கிடைத்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு தொலைக்காட்சியில் சைபுல்லா என்கவுண்டர் செய்தியை பார்த்த பிறகுதான் சர்தாஜிற்கு விவரம் தெரிந்துள்ளது.