மீனவர் படுகொலையை கண்டித்து மதுரையில் முற்றுகை.

363 0

சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு ​பலியான தமிழக மீனவர்களை காக்க தவறிய இந்திய அரசை கண்டித்து மதுரை மத்திய தபால் அலுவலகத்தை 7 மார்ச் 2017 காலை 11 மணியளவில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் முற்றுகையிட்டனர்.

இந்திய அரசிற்கு தெரியாமலோ, ஆதரவு இல்லாமலொ இலங்கை தமிழக மீனவரைப் படுகொலை செய்யவில்லை. இந்திய அரசின் வெளியுறவு, பாதுகாப்பு, பொருளாதார கொள்கைகள் இலங்கைக்கு ஆதரவாகவும், தமிழர் விரோதமாகவும் இருப்பதாலேயே தமிழக மீனவரை கொலைசெய்கிறது.

இந்திய அரசே இதில் முதன்மைக் குற்றவாளி, இலங்கை இதன் கைக்கூலி. இரண்டும் கொலைகார, கொள்ளைக்கார கும்பல்.

பாரம்பரிய மீன்பிடிப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்துவது சட்டவிரோதம். இது கொலைக்குற்றமாகவே நாம் பார்க்க வேண்டும். இலங்கை தூதருக்கு இது குறித்து சம்மன் அனுப்பாமலும், கொலை வழக்கினை பதிவு செய்யாமலும் இந்திய அரசு அயோக்கியத்தனம் செய்து வருகிறது. இந்த மீன்பிடி பகுதி பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட பகுதி என்று இரு அரசும் ஏற்றுக்கொண்ட பின்னர் மீனவர்களை கொலை செய்வது பச்சை அயோக்கியத்தனம்.

இந்திய அரசிற்கு எதிராக போராட்டத்தினை தீவிரப்படுத்துவோம்.