அத்துமீறி தமிழக கடற்றொழிலார்கள் கைது

404 0
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 5 தமிழக கடற்றொழிலார்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்டப்பட்ட படகும், மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட 13 தமிழக கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.