புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

243 0

எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை முடித்து விழி மூடி போன எமது தேசத்தின் இன்னிசைக் குரல் எஸ் ஜீ சாந்தன் அண்ணா உறங்கும் இன் நேரத்திலே ஜேர்மனின் ஸ்ருட்கார்ட் மண்ணில் சின்னம் சிறு குழந்தைகளின் இன்னிசை அரங்கேற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லயம் நுன்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழீழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளரும் லயம் நுன்கலைக்கழக பிரதம ஆசானுமாகிய இசைப்பிரியனின் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் அரங்கேற்றம் கண்டனர்.

இந்நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் சிறு வயது இளையவர்கள் என்ற பெருமை அடுத்த தலைமுறைக்கு எமது இசைப்பரம்பலையும் தாயக விடுதலைக்கான இசை செய்தியையும் ஒரு பெரும் இசையாளனின் சாவிலும் சொல்லி நின்றதை காணக் கூடியதாக இருந்தது. எஸ் ஜீ சாந்தன் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு அகவணக்கம் மலர்வணக்கம் செய்யப்பட்டு அவரின் இந்த குழந்தைகள் அரங்கேற்றம் கண்டதும், பாடகர் சாந்தன் அவர்களது நினைவலைகளுடன் நிகழ்வு நடந்ததும் மனதை நெருட வைத்த செய்தியாகிறது. ஒரு தலை முறை வீழ்ந்தாலும் அடுத்த தலைமுறையின் இசை பயணம் தொடரும் எம் இலக்கு நோக்கி என்ற செய்தியோடு நிகழ்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது…