களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் கான்ஸ்டபிள்

176 0

கல்கிஸை பொலிஸ்  பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் ஒருவித திரவத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப்  பொலிஸ் கான்ஸ்டபிள் அதே பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடன் காதல்  தொடர்பு கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.