அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்பு

87 0

‘நாட்டின் அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்பு’ என்ற தலைப்பில் எட்டு சார்க் நாடுகளின் ஊடகவியலாளர்களது பங்குபற்றலுடன் மூன்று நாள் சர்வதேச மாநாடு இந்தியாவின் புதுடெல்லியில் கடந்த வாரம் இடம்பெற்றது.

சார்க் ஊடகவியலாளர்கள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாடு இந்தியாவின் டில்லியிலுள்ள கௌதம புத்தர் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதோடு, இதில் 8 நாடுகளைச் சேர்ந்த பெருமளவான ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அதற்கமைய, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 3 ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தனர்.

சார்க் ஊடகவியலாளர் மன்ற அமைப்பின் இலங்கைக்கான உப தலைவர் ராஹூல் சமந்த ஹெட்டியாராச்சி மற்றும் ஊடகவியலாளர்களான காஞ்சன குமார ஆரியதாச, சனத் பிரியந்த ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

நாட்டின் அபிவிருத்திக்காக ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பிலும், அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் தொடர்பிலும் இரு நாட்கள் செயலமர்வுகள் இடம்பெற்றதோடு, அவற்றில் ஒரு நாள் டில்லியிலுள்ள பிரபல பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள், இதழியல் கல்வி தொடர்பான ஆய்வாளர்களால் செயலமர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஊடகவியலாளர்கள் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஆசிய பிராந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சர்வதேச செயற்குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மாநாட்டுக்கு பிரதம அதிதியாக டில்லியிலுள்ள கௌதம புத்தர் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஆர்.கே.சிங்க அழைக்கப்பட்டிருந்தார்.