மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில்…. (காணொளி)

321 0

மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பகுதியில், 4 பிள்ளைகளின் தந்தை காட்டு யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தந்தையான, 40 வயதுடைய எஸ்.கமலநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பங்குடாவெளியைச் சேர்ந்த எஸ்.கமலநாதன், வயல் வேலைக்காக சென்ற வேளை, அருகில் இருந்த நீர் ஓடையில் வைத்து யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.