100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும்: தமிழக முதல்வர்

246 0

100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் ஏரிகளில் எதிர்பார்த்தபடி தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் இப்போது 1.678 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், 100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழகத்தின் 3௦ மாவட்டங்களில் 1௦௦ கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரி புனரமைப்பு செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.

மார்ச் முதல்வாரத்தில் குடிநீர் மராமத்து திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.