மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடிப்படை குறைபாடுகள்

174 0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடிப்படை குறைபாடுகளால் மன்னார் மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளார்கள்.

இந்த வைத்தியசாலைக்கு  கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி ஸ்கேன் இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், குறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மன்னார் மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை இலட்ச மக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த வைத்தியாலை பல சேவை குறைப்பாடுகளுக்கு மத்தியில் இயங்குகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த வைத்தியசாலைக்கு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி ஸ்கேன் (சி.டி.சி ) இயந்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த இயந்திரத்தை பொருத்துவதற்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரத்தியேக கட்டடம் இல்லாத காரணத்தினால் இந்த இயந்திரம் பிறிதொரு மாவட்ட  வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சி.டி.சி இயந்திரத்தை பொருத்துவதற்கு பிரத்தியேக கட்டடம் நிர்மாணிக் க பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை இயந்திரம் வழங்கப்படவில்லை.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில்  இந்த சேவை இல்லாத காரணத்தினால் மன்னார் மாவட்ட மக்கள் யாழ்ப்பாணம், அனுராதபுர மாவட்ட வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த இயந்திரத்தை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்குமாறு சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.