திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 7 கிராம் ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவரை அடுத்தமாதம் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பயாஸ் ரஸாக் இன்று (29) உத்தரவிட்டார்.
திருகோணமலை விஜித்தபுர, பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.
சந்தேக நபர் ஐஸ் போதைப்பொரள் பாவனைக்கு அடிமையானவர் என்பதோடு திருகோணமலை பகுதியில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 7 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்து சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

