பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள்.

772 0

கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்லறை முன் அவர்தம் நினைவு சுமந்து கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்த காந்தள் மலர்சாத்தி சுடரேற்றி இருந்தார்கள்.

நிகழ்வில் குட்டி கண்ணன் இசை குழுவினரின் மாவீரர் கானங்களும் தொடர்ந்து  தமிழ் இளையோர் அமைப்பின் செல்வி கீர்த்தனா உதயகுமார் அவர்கள் ஆங்கில உரையாற்றினார், தொடர்ந்து  திருமதி.சுகிர்தா ஆனந்த் ஆசிரியையின் நெறியாள்கையில் நடனத்தை தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இளைய தலைமுறையின் குரலாக செல்வி சுதர்மா சிவபாலனின் உரை நடந்தேறியது தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கலைபண்பாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட அறிவாடல்,ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கான பரிசுகள் வழங்கபட்டது அதனைத்தொடர்ந்து திருமதி.ஞானமணி சிவநேசகுமார் ஆசிரியையின் நெறியாள்கையில் அவரது மாணவர்களின் தேசக்காற்று நாடகம் அரங்கேறியது தொடர்ச்சியாக திருமதி ரோஹிணி சாந்தரூபன் ஆசிரியையின் மாணவர்களின் நடனம் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் தொடர்பான உரையாற்றினார்.

தொடர்ச்சியாக திருமதி.சுகிர்தா ஆனந்த் ஆசிரியையின் நெறியாள்கையில் அவர்களுடைய மாணவர்களின் நடனமும், நாட்டியாலய நடனப்பள்ளி ஆசிரியர்களான திருமதி ராகினி ராஜகோபால் மற்றும் திருமதி ஷாமினி கண்ணன் ஆசிரியர்களின் நெறியாள்கையில் அவர்களுடைய மாணவர்களின் நடனம் நடைபெற்றது.

இறுதியாக தமிழீழ தேசிய கொடி கையேந்தலும் பிரித்தானிய கொடி கையேந்தலுடன் மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம் என்ற உறுதிமொழியோடு எமது தாரக மந்திரத்தை உச்சரித்து நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடன் நிகழ்வானது நிறைவு பெற்றது .