எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்!

189 0

இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ள அவர், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புதிய முதலீடுகள் குறித்தும் பேசியுள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் தமது அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக க்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அரசாங்கம் சார்பாக பிரதமர் நன்றி தெரிவித்தார்.