ஏவுகணை தாக்குதல் மின்சாரம் துண்டிப்பு ; டோர்ச் லைட் மூலம் அறுவை சிகிச்சை செய்த உக்ரேனிய வைத்தியர்கள்

96 0

கடந்த ஒன்பது மாதங்களாக ரஷ்யா – உக்ரேன் மோதல் நடத்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், உக்ரேனில் முக்­கிய மின்கட்டமைப்புகளைக் குறி­வைத்து பாரிய ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து அந்­நாட்­டின் பல பகு­தி­களில் மின்­சா­ரத் தடை ஏற்­பட்­டுள்ளது.

இந்நிலையில், டோர்ச் லைட் மூலம் அறுவை சிகிச்சையை உக்ரேனிய வைத்தியர்கள் செய்து சாதித்துள்ளனர்.

இது குறித்து  கிவ் நகரிலுள்ள இதய சத்திரசிகிச்சை மருத்துவ சேவைகளின் தலைவரான போரிஸ் டோடுரோவ், இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளியை வெளியிட்டார்.

அதில் ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தபோது வைத்தியர்கள் தலையில் விளக்கு (HeadLamps) அணிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை மின்சாரம் தடைப்பட்டபோது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது எனவும்,  வைத்தியசாலையில் பல மணி நேரம் தண்ணீர் இல்லை எனவும் வைத்தியர் டோடுரோவ் தெரிவித்தார்.

மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மெக்னிகோவா வைத்தியசாலையின் பணிப்பாளர், மின் துண்டிப்பின் போது பத்துக நோயாளிகள் ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை அட்டவணையில் இருந்தனர் என்றார்.

“மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒவ்வொருவரையும் காப்பாற்ற ஹெட்லைட்களை வைத்துள்ளனர்” என்று வைத்தியர்களில் ஒருவரான செர்ஜி ரைசென்கோ பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அதில், 23 வயதான ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறிய இரண்டு வைத்தியர்களின் புகைப்படத்தை ரைசென்கோ வெளியிட்டார்.

வைத்தியர்களளான யாரோஸ்லாவ் மெட்வெடிக் மற்றும் க்சேனியா டெனிசோவா ஆகியோர்  தங்கள் சக ஊழியர்களுடன் சேர்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது ஒரு தனித்துவமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

யாரோஸ்லாவின்  35 ஆண்டுகள் அனுபவத்தில் இது முதல் முறையாக நடந்தது. நரம்புகள் பதட்டமாக இருந்தன, ஆனால் பொருமையாக… அதைச் செய்தார், ” என தெரிவித்தார்.

உக்ரேனிய சுகாதார அமைச்சகம் பேஸ்புக்கில்,  “ஒளியின் பற்றாக்குறை எங்களைத் தடுக்காது” என பதிவிட்டுள்ளது.

வியாழன் அன்று உக்ரேனின் மின் கட்டமைப்பு அனைத்து பகுதிகளுக்குமான மின்சாரத்தை மீட்டெடுத்தது.

ஆனால் தனிப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் படிப்படியாக இணைக்கப்படுகின்றன என ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கியின் அலுவலக அதிகாரி ஒருவர் டெலிகிராமில் தெரிவித்தார்.