எல்ஜிபிடிகியூ ஆதரவு பிரச்சாரங்களுக்குத் தடை! ரஷ்ய பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றம்

101 0

ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் உட்படலானோர் அடங்கிய எல்ஜிபிடிகியூ (LGBTQ) சமூகத்தினருக்கு ஆதரவான பிரச்சாரங்களை தடை செய்வதற்கான சட்டமூலம் ரஷ்ய பாராளுமன்றத்தில்  இன்று நிறைவேற்றப்பட்டது.

ரஷ்ய பாராளுமன்றத்தில் கீழு; சபையில் இச்சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

பாரம்பரியமற்ற பாலியல் உறவுகள் தொடர்பான எந்த பிரச்சாரப் பொருளுக்கும் பின்விளைவுகள் இருக்கும் என ரஷ்ய பாராளுமன்ற கீழ் சபையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் லொலோடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் பரப்பப்படும் இருளிலிருந்து, எமது பிள்ளைகளையும் நாட்டின் எதிர்காலத்தையும் இச்சட்டமூலம் பாதுகாக்கும் எனவும் அவர் கூறினார்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெறும் கத்தாரில் ஒருபாலின உறவுகள் தண்டனைக் குரிய குற்றமாகவுள்ள நிலiயில், எல்ஜிபிடிகியூ சமூகத்தினருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய பாராளுமன்ற கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலத்துக்கு பாராளுமன்ற மேல் சபையும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். இப்படிமுறைகள் இலகுவாக நிறைவேற்றப்படும் எனக் கருதப்படுகிறது.