தூதரக சேவைக் கட்டணங்களை (கொன்சூலர் சேவைக் கட்டணம்) அதிகரிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், குறித்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 800 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பிரஜைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் எந்தவொரு ஆவணத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 1,500 லிருந்து 3,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

