வாக்குரிமைக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆக குறைக்கிறது நியூ ஸிலாந்து

73 0

வாக்குரிமைக்கான குறைந்தபட்ச வயது 18 ஆக இருப்பது. இளைய சமூகத்தின் உரிமைகளை மீறுவதாக உள்ளது என நியூஸிலாந்தின் உச்ச நீதிமன்றம்   திங்கட்கிழமை (21)தீர்ப்பளித்துள்ளது.

வாக்குரிமைக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆக குறைக்குமாறு கோரி இளையோர் குழுவொன்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வாக்களிப்பற்கான குறைந்தபட்ச வயதை 16 ஆக குறைப்பதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவித்துள்ளார்.

“வாக்குரிமைக்கான வயதை குறைப்பதை நான் தனிப்பட்ட ரீதியில் ஆதரிக்கிறேன். எனது எனக்கோ அரசாங்கத்துக்கோ பிரச்சினையில்லை” என அவர் கூறினார்.

 

அதேவேளை, தேர்தல் தொடர்பான இத்தகைய மாற்றங்களுக்கு பாராளுமன்றத்தில் 75 சதவீதமான எம்.பிகளின் ஆதரவு தேவை என அவர் கூறினார்

நியூ ஸிலாந்து, 1893 ஆம் ஆண்டில் வயது வந்த ஆண்கள்? பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாகியமை குறிப்பிடத்தக்கது.