திருத்தங்கள் மேற்கொள்ளாவிடின் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை – ஜீ.எல்.பீரிஸ்

115 0

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் இன்று மாலை இடம்பெறவுள்ள இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்த முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியாது. எனவே இவ்விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறான காரணங்களைக் குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்தினால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (நவ.21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமல் வாக்கெடுப்பு இடம்பெறுமானால் அதற்கு எம்மால் ஆதரவளிக்க முடியாது.