தமிழர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என்கிறார் டக்ளஸ்

211 0

கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச அளவிலான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்தவருடத்திற்குள் தீர்வு காண்பதற்காக அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் மிகமுக்கமானது இந்திய, இலங்கை ஒப்பந்தமாகும்.

துரதிஷ்டவசமாக தமிழ்த்தலைவர்களும் விடுதலைப்புலிகளும் அதனை எதிர்த்தார்கள். அதன்விளைவால் தமிழ் சமூகம் முப்பது ஆண்டுகள் பின்னடைவைச் சந்திக்குமளவுக்கு நிலைமைகள் மோசமடைந்து விட்டன.

அமைச்சு பதவியை பொறுப்பேற்கமாட்டேன்..! டக்ளஸ் தேவானந்தா அதிரடி.. | Jaffna  Breaking News 24x7

இவ்வாறான நிலையில், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தினை தற்போதுள்ள தமிழ்த் தலைவர்களாவது சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது.

சமகால நிலைமைகளின் பிரகாரம், தென்னிலங்கையில் உள்ள தலைவர்களில் விடயங்களை நடைமுறைச் சத்தியமாக்ககூடிய அளவிற்கும்ரூபவ் குறைந்தபட்ச நியாயத்துடனும் அணுகுமுறைகளைச் செய்யவல்ல ஒரேதலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

இதன் காரணத்தாலேயே, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின்போது ஈ.பி.டி.பி.தமாக முன்வந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது.

எம்மைப்பொறுத்தவரையில், நெருக்கடியான நிலைமைகளில் பதவியைப் பெற்றுக்கொண்ட அவரை முழுமையாக ஆதரித்து தோள்கொடுத்தோம். அதன்ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று நம்பிக்கையும் கொண்டிருந்தோம்.

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவேரூபவ் பகிரங்கமான அறிவிப்பை விடுத்துள்ளார். இதனைவிட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றையும் அமைத்துள்ளார்.

அந்த வகையில்ரூபவ் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தமிழர்களுக்கு மிகச்சாதகமானதாக உள்ளதென்பதே எமது நிலைப்பாடாகும். இவ்வாறானதொரு சூழல் எதிர்காலத்தில் ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியாது.

ஆகவேரூபவ் இந்தச் சூழலே அதியுச்ச சந்தர்ப்பமாக தமிழ் மக்கள் கொள்ள வேண்டும். குறிப்பாகரூபவ் எதிர்ப்பு அரசியலைச் செய்து வருகின்ற தமிழ்தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனடிப்படையில் அவர்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

நாம்ரூபவ் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதையே நோக்காக கொண்டிருக்கின்றோம். சந்தர்ப்பங்கள் கிடைக்காது விட்டால் சந்தர்ப்பங்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துவதும் எமது மூலோயமாகும்.

அந்தவகையில், ஜனாதிபதி ரணிலை ஆதரித்ததன் மூலம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்துள்ளோம். தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் முயல்வோம் என்றார்.