ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாகத் தெரிவு

364 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாடு புத்தளத்தில் நடைபெற்ற நிலையில் புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

அதனடிப்படையில் கட்சியின் தலைவராக மீண்டும் ரவூவ் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தவிசாளராக ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவாகியுள்ளார்.

அதேநேரம் சிரேஷ்ட துணைத் தலைவராக எம்.எஸ்.எம்.அஸ்லமும் துணைத் தலைவர்களாக எம்.ஐ.எம். மன்சூர் யூ.டி.எம். அன்வர் அலிஸாஹிர் மௌலானா எஸ்.எம்.ஏ. கபூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலாளராக நிசாம் காரியப்பரும் பொருளாளராக எம்.பைசல் காசிம் எம்.பியும் பிரதி தவிசாளராக ஏ.ஜே.எம். ரிஸ்வியும் மஜ்லிஸ்-இ-ஷுரா தலைவராக ஏ.எல்.எம். கலீலும் (மௌலவி) தேசிய அமைப்பாளராக எம்.எஸ்.தௌபீக் எம்.பி அரசியல் அமைப்பு விவகாரங்கள் இயக்குநராக எம்.பி.பாரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசை விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதன் மூலம் உள்ள  அதிர்ச்சியூட்டும் செய்தி என்ன தெரியுமா? - KALPITIYA VOICE - THE TRUTH

தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக ரஹ்மத் மன்சூரும் பிரதி தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் சகோ. அப்துல் ஹையும் தேசிய பிரசார செயலாளராக யு.எல்.எம்.என். முபீனும் உலமா காங்கிரஸின் பிரதிநிதியாக எச்.எம்.எம். இல்யாஸாம் (மௌலவி) பிரதி செயலாளராக மன்சூர் ஏ. காதரும் பிரதி பொருளாளராக ஏ.சி.யாஹ்யா கானும் மஜ்லிஸ்-இ-ஷுரா துணைச் செயலாளராக ஸியாத் ஹமீத்தும் தேசிய பிரதி அமைப்பாளராக எம்.எஸ். உதுமா லெப்பையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம்ரூபவ் அரசியல் மற்றும் மத விவகாரங்கள் ஒருங்கிணைப்பாளராக ப்ராஸ் மொஹமட் தம்பியும் சமூக சேவை மற்றும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பாளராக கே.எம்.எம். ரஃபீக் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களின் ஒருங்கிணைப்பாளராக எஸ்.எச்.எம்.நியாஸும் பெண்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக சித்தி ரிஃபாயா இப்தயும் மாநாடு செயலாளராக அர்ஷாத் நிஜாம்தீனும் மஜ்லிஸ்-இ-ஷுரா செயலாளராக யு.எம்.வாஹித்தும் தலைமை மற்றும் பயிற்சி இயக்குனராக மொஹமட் மஹ் ஹில்மியும் மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கும் சுகாதார இயக்குநராக கே.எம்.ஆமீனும் சட்ட உதவி இயக்குநராக ஜே.எம். லஹீர் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக ஆரிப் சம்சுதீனும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.