நோக்கியா 3310 புதிய டீஸர்: வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

343 0

நோக்கியா 3310 மொபைல் போன் வெளியீடு குறித்த புதிய டீஸர் அதிகாரப்பூர்வமாக நோக்கியா மொபைல் யூட்யூப் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. நோக்கியா P1, நோக்கியா D1C, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 என பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்எம்டி குளோபல் சார்பில் எத்தனை நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல் பீச்சர்போன்களையும் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் பழைய நோக்கியா 3310 பீச்சர் போன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
அந்த வகையில் நோக்கியா 3310 புதிய டீஸர் வீடியோ நோக்கியா மொபைல் யூட்யூப் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 04.13 நிமிடங்கள் கொண்ட வீடியோ ‘உன்னை எனது பழைய நோக்கியா 3310 போன்று காதலிக்க வேண்டும்’ (I wanna love you like my Nokia 3310) என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பழைய நோக்கியா 3310 உடன் இன்றைய ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.
எனினும் இந்த வீடியோ மீண்டும் பழைய நோக்கியா 3310 புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.