லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து நடாத்திய கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்பு நிகழ்வு

289 0

கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் பல வருடங்களுக்கு பின்னர் பல தமிழ் அமைப்புகள் ஒன்றாக கூடி கவனயீர்ப்பு நிகழ்வில் ஈடுபட்டனர்.குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா , பிரித்தானியா தமிழர் பேரவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புகள் பொது இலக்கின் அடிப்படையில் ஒற்றுமையாக போராட்டத்தை முன்னெடுத்தது கலந்துகொண்ட மக்களால் வரவேற்கப்பட்டது . எமது நிலம் எமக்கு வேண்டும் , வெளியேறு வெளியேறு சிங்கள ராணுவமே எனும் பல கோஷங்களுடன் இக் கவனயீர்ப்பு நிகழ்வு அரங்கேறியது.கவனயீர்ப்பு நிகழ்வின் இறுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதி உரையாற்றும் போது எமது தனிநபர் சுயநலன்களை புறம்தள்ளி எதிர்காலத்திலும் எமது மக்களுக்காய் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்று வலியுறுத்தினார்.