இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக செய்யாததை மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளது- லசந்தவின் மகள்

219 0

இலங்கை அரசாங்கம் 13வருடங்;களாக சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது எனது தந்தையின் படுகொலைக்கு  நீதியை பெற்றுத்தந்துள்ளது என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

ஹேக்கின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று  இலங்கை அரசாங்கம் எனது தந்தையின் படுகொலையில் குற்றவாளி என்பதை கண்டறிந்துள்ளது என டுவிட்டர் பதிவில் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக  செய்யதவறியதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளது – எனது தந்தையின் கொலைக்கு நீதியை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் தீர்ப்பாயத்திற்கும் பீரிபிரஸ் பத்திரிகையாளகளை பாதுகாப்பதற்கான குழு எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் ஆகியவற்றிற்கு அவர்களின் கடுமையான பணி இந்த திட்டத்திற்கு உயிர்கொடுப்பதற்கான அவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக  எங்கள் குடும்பத்தின் நன்றியை தெரிவிப்பதாக அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.