யாழ். பல்கலையில் 5ஆம் நாள் நினைவேந்தல்

180 0
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளும், யாழ்.  பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவாலயத்தில், இன்று (19) காலை உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் நினைவுப் படத்துக்கு  ஈகைச்சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி, ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் செலுத்தப்பட்டது.