கசிப்பு சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

132 0

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 50 லீற்றர் கோடா, 8 லீற்றர் கசிப்பு மற்றும் 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் இருந்து கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற் படுத்தப்பட உள்ளார்.