இலங்கை தொடர்பில் ஒபாமா நிர்வாகம் அதிருப்தியான கொள்கை

383 0

OBAMA_2624702f_2624845fஇலங்கை அரசாங்கம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம் அதிருப்திக்குரிய கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் த வயர் என்ற சர்வதேச ஊடகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.

முன்னாள் அரசாங்கத்தைக் காட்டிலும் தற்போதைய அரசாங்கம் பல்வேறு விடயங்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

ஜனநாயகம், மனித உரிமை நிலவரங்கள் என்பன மேலோங்கி இருக்கின்றன.

அத்துடன் பல நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டமை, தகவல் அறியும் உரிமை சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டமை உள்ளிட்ட சில முக்கியமான விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கிறது.

இவை ஒருபுறம் இருக்க, பொறுப்புக்கூறல், மறுசீரமைப்பு சார்ந்த விடயங்களில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு எதனையும் முன்னேற்றகரமாக மேற்கொள்ளவில்லை.

யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நியாயம் வழங்கும் வகையிலேயே கடந்த வருடம் ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அந்த பிரேரணையின் பரிந்துரைகள் பெரும்பாலும் அமுலாக்கப்படாமலேயே இருக்கின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்கு இந்த விடயங்களில் அழுத்தங்களைக் கொடுத்திருக்க வேண்டும்.

இலங்கைக்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜதந்திரிகளான நிஷா பீஸ்வால் மற்றும் தொம் மலினோவ்ஸ்கி ஆகியோர் இந்த விடயத்தில் அவதானம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.

அவர்கள் இலங்கை அரசாங்கத்தை பாராட்டி அறிக்கைகளை விடுவதால் எந்த பயனும் இல்லை.

பொறுப்புக்கூறல் மற்றும் மறுசீரமைப்பு விடயங்களில் அவர்கள் மேலும் அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் நம்ப முடியாதுள்ளது.

எனவே ஒபாமா நிர்வாகம் இலங்கை தொடர்பில் அதிருப்திகரமான கொள்கை ஒன்றை பின்பற்றுகிறது என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.