அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரம்

347 0

grocery-items-sri-lankaகட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

16 அத்தியாவசியப் பொருட்களிற்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு, அவை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே.பீ.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த பொருட்களை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலை விற்கும் வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 16 பொருட்களின் பெயர் விபரம் வருமாறு,

கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா
கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா
சிவப்பு பருப்பு – 169 ரூபா
சீனி 1 கிலோகிராம் – 95 ரூபா
நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் – 495 ரூபா
நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம் – 410 ரூபா 
கடலை 1 கிலோகிராம் – 260 ரூபா
பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா
டின் மீன் – 140 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா
உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா 
கோதுமை மா 1 கிலோகிராம் – 87 ரூபா
உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் – 120 ரூபா
பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா
காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா
கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா
கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா
மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா
சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா