மட்டு மாவடிவேம்பில் பதுக்கிவைத்திருந்த டீசல், மண்ணெண்ணெய் மீட்பு

247 0

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெண்ணெயை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, ஒருவரை கைது செய்துள்ளனர்.

குற்ற விசாரணைப் பிரிவு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று மாலை 04.00 மணிக்கு  குறித்த பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.

இதன் போது பெரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டதுடன் ஒருவரை கைது செய்து சந்திவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.