பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது

192 0

காலி முகத்திடலில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ; பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் காலி முகத்திடலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆதாரமாகக்கொண்ட அவர் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.