சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பினை நினைவுகூரும் வகையிலும், முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களின் வீரவரலாற்றினை மனதிருத்தியும் நேற்றையதினம் (14.05. 2022) ஒஸ்னாபுறுக் நகரில் தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு சுடர்மலர் வணக்கத்தோடு ஆரம்பித்து தொடர்ச்சியாக வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுரங்கள் எமது இளையவர்களால் வழங்கப்பட்டு தமிழின அழிப்பு தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.
தமிழின அழிப்பின் குறியீட்டு வடிவமாக வரையப்பட்ட ஓவியக் காட்சிப்படுத்தல்கள் வேற்றின மக்களை மிகவும் பாதித்திருந்த தனை அவதானிக்க முடிந்தது. பிற்பகல் 2 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்தோடு தமிழின அழிப்பின் கவனயீர்ப்பு நிகழ்வு ஒஸ்னாபுறுக் நகரில் நிறைவெய்தியது. தொடர்ந்து இக்கவனயீர்ப்பு நிகழ்வானது இன்று (15. 05. 2022) பீலபெல்ட் நகரில் நடைபெற்று நாளை(16.05.2022) தொடர்ச்சியாக கன்னோவர் நகரிலலும் நாளைமறுநாள் (17. 05. 2022) பேர்லின் நகரிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


















































