டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழிபாடு.

33 0

கடந்த 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 19:30 மணிக்கு Sjaelland வேல்முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த அனைவருக்குமான நினைவேந்தல் வழிபாடு மிகவும் உணர்வுபூர்வமாக பொதுமக்களால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மரணித்த அனைவரையும் நினைவிலேந்தி நெய்விளக்கு ஏற்றி மனமுருகி பிரார்த்தித்து, பஜனை பாடல்கள் பாடப்பட்டு, ஆலய குருக்களின் பூஜையுடன் வழிபாடு சிறப்பாக நடந்தேறியது.