ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…

28 0

கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு பதிலளித்துள்ளார்.

பிரதமருக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஐனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.