 ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் அதிக வசிக்கும் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 11 பேர் வரை பலியாகினர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் அதிக வசிக்கும் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 11 பேர் வரை பலியாகினர்.
சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
சன நடமாட்டம் அதிகமாக இருந்த சந்தை பகுதியிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை.
எனினும், ஈராக்கில் கடந்த வாரம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளே இந்த குண்டு வெடிப்புக்கும் காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            