வாள்கள், கத்திகளுடன் நான்கு நபர்கள் கைது

281 0

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்டகுற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சேதவத்தை பகுதியில் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 வாள்கள் மற்றும் 02 கத்திகள் வைத்திருந்த நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 35, 39 மற்றும் 52 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.