கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் – அச்சுறுத்தி பெறப்பட்ட வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளபோவதில்லை!

194 0

கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை அச்சுறுத்தி பெறும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கைக்குண்டு விவகாரத்தில் உண்மை தெரியவரும்வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதால் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கத்தோலிக்க ஆயர்களின் உதவியை பெறப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகளின் உதவியை கோரப்போவதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்