பொரளை கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்ன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலையை சேர்ந்த ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவர் உட்பட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த வைத்தியருக்கு கைக்குண்டினை வழங்கிய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

